விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம் “கொரோனா வைரஸ் ஞாபகப்படுத்தும் சைவ தமிழர்களின் சம்பிரதாயங்களும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் விஞ்ஞான காரணங்களும்

இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கு கேள்வி கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலர் பெரும்பாலான சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆகவே, அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

பொதுவாகவே மூட நம்பிக்கைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது இந்து மதம். ஆனால் உண்மை மிகவும் அப்பாற்ப்பட்டது. இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது தனிப்பட்டவரின் செயல் மேம்பாட்டுக்கும் உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்கால மரபுகளுக்கு பின்னால் உள்ள அற்புதமான விஞ்ஞான காரணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும். வாங்க பார்க்கலாம்.

நமஸ்காரம்: நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், இதில் உடல் உளச் சுகாதரமும் விஞ்ஞான காரணங்களும் உள்ளது. நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும் இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

Advertisement

காலையில் சூரியனை வழிபடுதல்: விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளி மூலம் வைற்றமின் டி கிடைக்கின்றது அத்துடன் அவை கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. பிறபொருளெதிரிகளின் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம்.

துளசியை வழிபடுதல்: முன்னைய காலத்தில் முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

மெட்டி: திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

பொட்டு: ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ள ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.

ஆபரணங்கள்: இந்து பெண்களுக்கு ஆபரணங்கள் என்றால் கொள்ளை பிரியம். இந்திய பெண்கள் கட்டாயம் தினமும் தங்கம், வெள்ளி போன்றவற்றாலான காதணி, வளையல், கொலுசு, மோதிரம், செயின் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். அதிலும் அவர்கள் அணியும் வெள்ளிக் கொலுசு உடலின் மற்ற கனிமங்களை சீராக பராமரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

கைகளில் மருதாணி வைப்பது: அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணிதடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.

காது குத்துவது: குழந்தையாக இருக்கும் போதே, ஆண், பெண் என இருபாலருக்கும் காது குத்தும் பழக்கம் இந்துக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்று. உண்மையில் காது குத்திக் கொள்வதால், மனதில் அமைதி உருவாகிறது. காது குத்துவதற்கும், ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், ஆண் குழந்தைகளுக்கு காது குத்துவதால், குடலிறக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். மற்றும் பெண் குழந்தைகளுக்கு குத்துவதால், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும்.

விரதம்: இநதுப் பெண்கள் எதற்கு எடுத்தாலும் விரதம் இருப்பார்கள். அதிலும் மாதத்திற்கு ஒரு முறையாவதுவிரதம் இருப்பார்கள். இப்படி விரதம் இருப்பதால், அவர்களின் செரிமான மண்டலம் சீராக செயல்படுவதோடு, எடை குறையும், மெட்டபோலிசம் அதிகரிக்கும், மூளையின் செயல்பாடு மேம்படும் மற்றும் வாழ்நாள் அதிகரிக்கும். அதனால் தான் ஆண்களை விட பெண்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்றும் சொல்லலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள்: வெள்ளி தட்டுகளில் சாப்பிடுவது, அவர்களின் நிலையை காண்பிப்பதற்காக இல்லை, வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் தான். நிபுணர்களும், வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால், அதில் உள்ள அன்டி-வைரல் மற்றும் அன்டி-பாக்டீரியல் தன்மையால், உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று சொல்கின்றனர்.

நெய்: பெரும்பாலான வீடுகளில் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சமைப்பார்கள். உண்மையில் எண்ணெயை விட நெய் மிகவும் ஆரோக்கியமானது. நெய்யை தினமும் அளவாக உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக
இருக்கும்.

தரையில் அமர்ந்து உண்ணுவது: நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும். தரையில் அமர்ந்து உண்ணுவது மட்டுமல்லாது உணவை கையில் அள்ளி குனிந்து தான் உண்ண வேண்டும் என்பதும் மரபு. இப்படி செய்வதினால், தொப்பை உருவாவது தடுக்கப்படும்.

உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது: விருந்தோம்பலுக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் முன்னைய காலத்தில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடவல்லது இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

பயணத்திற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுவது: வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், தயிரும் தேனும் கொடுப்பது இரு வழக்கமாக உள்ளது. இது அதிர்ஷ்டமானது என நம்பப்படுகிறது. தயிரில் கல்சியம் மற்றும் புரதம் உள்ளது. கூடவே இயற்கை சர்க்கரையும் சிறிதளவில் உள்ளது. இதனால் வயிற்றுக்கும், செரிமான அமைப்பிற்கும் நல்லதாகும். அதனால் வெளியே செல்லும் முன் இதனை உண்ணச் சொல்கிறார்கள். இதில் குளிர்ச்சி தன்மையும் உள்ளது. அதனால் அழுத்தம் நிறைந்த வேலைகளை செய்ய கிளம்புவதற்கு முன் இதனை உண்ண வைக்கிறார்கள்.

ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல்: பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்ற மூட நம்பிக்கையைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும். ஒருவர் இறந்த பிறகு அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும்.இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பாக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு, பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.
இவ்வளவு நாளாக இதனை ஒத்துக்கொள்ளாத நம்மவர், இன்று கொரணா பீதியால் கடைப்பிடிக்கின்றோம்.

வடக்கை நோக்கி தலை வைத்து படுக்காதீர்கள்: வடக்கு என்பது சாத்தானின் திசை என்பதே இதற்கு பின்னணியில் நீங்கள் அறிந்திருக்கும் ஒரே காரணமாக இருக்கும். அதனால் அந்த திசையை நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள் என கூறுவார்கள். இருப்பினும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? வடக்கு திசையில் தலை வைத்து படுக்கும் போது, அது வட துருவம் என்ற காரணத்தினால், உங்கள் தலை ஒரு காந்தமாக செயல்படும். தூங்கும் போது வடக்கு திசையை நோக்கி தலைஇருந்தால், உடலின் வட துருவமும் பூமியின் வட துருவமும் ஒன்றோடு ஒன்று தள்ளும். இதனால் உங்கள்
இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு: எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு என்பது தீய கண்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் மூடநம்பிக்கை தோன்ற காரணமாக இருந்தது என்னவென்று தெரியுமா? அவைகளுடைய குணப்படுத்தும் குணத்தினாலேயே. இவை
இரண்டிலுமே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதன் பயனை விளக்கும் விதமாக அதனை சடங்குகளில் பயன்படுத்தினார்கள். அதுவே நாளடைவில் ஒரு புகழ் பெற்ற வழக்கமாக மாறி விட்டது.

ஆரத்தி எடுப்பது: காலம், காலமாக நமது பழக்க வழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல. கடவுளை வழிபடும் போதும் ஆரத்தி காண்பிக்கிறோம். நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது. முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம். திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்கு தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம். இதன் பின்னணியிலுள்ள அறிவியல் காரணங்கள்,ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். அந்த சிவப்பு நீரை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து, அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 03 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகிறோம்.

மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிங்கள் அதிகம் அண்டியிருக்கும். இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். உடல் மேல் கிருமிகள் அண்டியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இது அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.

இரு கை கூப்பி வணக்கம் சொல்லியதும், வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்ததும் ஒரு சிலருக்கு ஞாபகம் வரலாம். மஞ்சள் நீர், மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியதும் மஞ்சள் பூசி குளித்ததும் மறந்தே போயிற்று. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்த்து, வாழை இலையில் உணவு பரிமாறியது மறந்து துரித உணவுகளுக்கு அடிமையாகி போய்விட்டோமே. வேப்பங்குச்சியால் உப்பு மற்றும் கரி கொண்டு பல் துலக்கி, மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டதும், நுளம்புத் தொல்லைக்கு வேப்பம்இலையில் புகை போட்டதும் ஒருகாலம் இப்போ நுளம்பு வலை, நுளம்புத் திரி இல்லையென்றால் தூக்கமே வராதாம்.

வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி தினமும் காலையில் ஊறவைத்த கசாயம் குடிப்பதும், தவறாது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்கவிட்டது வழக்கிழந்து போயிற்று அதைவிட மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி தான் வீட்டிற்குள் செல்வார்கள். இதே போல நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைவார்கள்.

நமது முன்னோர்கள் எதையும் வெறுமென செய்து வைக்கவில்லை, அவர்களது செயல்களில் மருத்துவமும், அறிவியலும் புதைந்து இருக்கிறது என்பதற்கு ஆரத்தி எடுக்கும் முறை சிறந்ததொரு சான்றாக விளங்குகிறது. சரியான புரிதலின்மையின் காரணமாக, இந்த தலைமுறையினர், இவற்றை எல்லாம் மூட நம்பிக்கை, வீண்செலவிற்கான சடங்குகள், அறிவியல் வளர்ந்த பிறகும் இதை ஏன் கடைபிடிக்கிறீர்கள் என்றுகுற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இம் மரபுகள் அனைத்துமே நோயக் pருமிகளை அழிப்தற்கும், பெருகவிடாதுதடுப்பதற்கும், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுத்தமாக வாழ்வதற்கும் மட்டுமே சைவ தமிழனால் உருவாக்கப்பட்டன. என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்.

எனவே, நமது முன்னோர்களின் செயல்களில் ஒளிந்திருக்கும் ஆழமான விஞ்ஞானத்தை நாம் முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும்……..இக்கட்டுரைக்கு முற்றுப்புள்ளியிட முடியாது…!

காலிங்கராசா ஹரிச்சந்திரா

தொழிநுட்ப அலுவலர்

மீன்பிடியியல் விஞ்ஞான துறை, விஞ்ஞான பீடம்

யாழ் பல்கலைக்கழகம்.