கனடாவில் திடீரென உயிரிழந்த பிரபல இளம்நடிகர்! இறுதிச்சடங்கில் ஏற்பட்ட சிக்கல்

கனடாவை சேர்ந்த பிரபல இளம்நடிகர் லோகன் வில்லியம்ஸ் 16 வயதில் திடீரென உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி தொடரான தி பிளாஷ் தொடரில் நடித்து பிரபலமானவர் லோகன்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென நேற்று மாலை உயிரிழந்துள்ளார். லோகன் மறைவை அவர் நண்பர்களும் குடும்பத்தாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

 

இது தொடர்பாக பேசிய அவர் தாயார், லோகன் மறைவால் எங்கள் குடும்பம் நிலைகுலைந்துள்ளது.

 

அவன் பெரிய நடிகனாக வருவதற்கான அழகு, திறமையை கொண்டிருந்தான் என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பிரச்சனையால் சமூக விலகல் அமுலில் இருப்பதால் இறுதிச்சடங்கு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையில் தி பிளாஷ் தொடரின் நாயகன் க்ராண்ட் கஸ்டின், லோகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மோசமான செய்தியை இப்போது தான் கேட்டேன் என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.