கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 8 பேரின் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில், கிராமங்களிலும் நகரங்களிலும் சிலர் வாட்ஸ் ஆப் பக்கத்தில் கொரோனா தடுப்பு மருந்து என வரும் பொய்யான தகவல்கள், வதந்திகள் பலவித அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தடுக்க அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

Advertisement

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்தை தயாரித்துள்ளனர்.

அதை சாப்பிட்டால் கொரோனா தாக்காது என நம்பியே மருந்தை தயாரித்துள்ளனர்.

இந்த ஊமத்தை மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவித்துள்ளனர்.