தமிழக்தில் கொரோனாவால் பலியான 14 மாத குழந்தை!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 14 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் ராம் நகரில் கடந்த 5ம் திகதி 14 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

புலம்பெயர் தொழிலாளியின் இக்குழந்தைக்கு எந்த பயண விபரமும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் மட்டும் 175 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.