வவுனியாவில் தம்மை பிரபலப்படுத்த சில சுகாதார உத்தியோக்தர் விரும்பி வருகின்றனர்,அவர்களால் கொரோனா தொற்றும் அபாயம் உள்ளது!

வவுனியாவில் சுகாதார பிரிவில் பணியாற்றும் சிலர் கொரோனா சந்தேக நபர்களுக்கான சிகிச்சையின் போது தமது பிரபல்யத்திற்காக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலரை பரிசோதனைக்குட்படுத்தல் மற்றும் அவர்களுக்கான இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வது தொடர்பில் சேவை என்பதற்கப்பால் தம்மை பிரபலப்படுத்த சில சுகாதார உத்தியோக்தர் விரும்பி வருவதாகவும் இவ்வாறானவர்கள் அரச வாகனங்களில் ஊடகவியலாளர்கள் சிலரை ஏற்றிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படு வகின்றது.

Advertisement

வவுனியா வடக்கு பிரதேசத்திலேயே இவ்வாறான செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு ஊடகவியலாளர்களை வரவழைத்து அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு அங்கிகளும் வழங்காத நிலையில் நோயாளர் காவு வண்டிகளில் ஏற்றிச் செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கவனம் செலுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொடர்பான தகவல்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே வெளியிட முடியும் என்கின்ற நிலையில் சுகாதார பிரிவினர் சிலரின் இவ்வாறாக தம்மை பிரபலப்படுத்தும் செயற்பாடானது கொரோனா தொற்றுக்கு உடந்தையாக சுகாதார பிரிவினரே செயற்படுவதற்கு காரணமாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சுகாதார பிரிவினர் தொடர்பில் வட மாகாண ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.