வவுனியா இலுப்பைக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்னதாக்கி உயிரிழப்பு!

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் இன்று மாலை தனது வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உடனடியாக அவர் அவரச அமலபுலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சம்பவத்தில் எஸ். மங்களேஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்த நிலையில் இருநாட்களாக இடிமின்னலுடன் மிதமான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.