வவுனியாவில் மினி சூறாவளியால் பாடசாலைகட்டடம் சேதம்!

வவுனியாவில் வீசிய மினி சூறாவளியால் பத்து வீடுகள் மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பன சேதமடைந்துள்ளன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்ததுடன் இருநாட்களாக இடிமின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.

இந்நிலையில், வவுனியா, சுந்தரபுரம் மற்றும் மணிபுரம் பகுதியில் வீசிய மினி சூறாவளியில் பத்து வீடுகளின் கூரைகள் பாரிய சேதமடைந்துள்ளதுடன் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்தின் பிரதான கட்டடங்களின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதேவேளை, பப்பாசித் தோட்டங்களும் சூறாவளியால் பாதிப்படைந்துள்ளன.

இதேவளை, வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோயில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்றும் முறிந்து வீழ்ந்த நிலையில் குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

Advertisement