இலங்கையில் மேலுமொரு கொரோனா தோற்றாளர் இன்று இனம் காணப்பட்டார் – எண்ணிக்கை 190 ஆனது

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் முழுமையாகச் சுகமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

இதேவேளை இலங்கையில் 49 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 134 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.