நாடுகடந்த தமிழீழ உறுப்பினரின் மனைவி கொரோனாவால் பலியானார்!

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்துவந்தவரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், உறுப்பினருமாகிய திரு. பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் துணைவியார் திருமதி. கமலா பாலச்சந்திரன் அவர்கள் கொரோனா தாக்கத்திற்க்கு உள்ளாகி பாரீஸ் நகரில் நேற்றைய தினம் காலமானார்.

இவ் இறப்பு தொடர்பில் நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர் யோ. அன்ரனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

Advertisement

திருமதி. கமலா பாலச்சந்திரன் இறப்பால் கலங்கியுள்ள குடும்பத்தார் மற்றும் உறவினர்களிற்கு ஆழ்ந்த துயரத்தினை அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் நான் பகிர்ந்து கொள்கின்றேன் என மேலும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 16 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.