உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 212 ஆனது!

முழு உலகத்தையுமே பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

இறுதியாக வெளியாகிய குறித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில்,

கொரோனா தொற்றினால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்து 93 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 53 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 16 ஆயிரத்து 454 பேரும், ஸ்பெயினில் 15 ஆயிரத்து 238 பேரும், இத்தாலியில் 18 ஆயிரத்து 279 பேரும், பிரான்ஸில் 12 ஆயிரத்து 210 பேரும் உள்ளடங்கலாக உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

இன்னும் சில மணி நேரங்களில் ஒரு லட்சம் என்கின்ற மிகப் பெரிய எண்ணிக்கை இழப்பை மனித குலம் சந்திக்கப்போகும் அபாயம் காணப்படுவதாக புள்ளிவிபர மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.