நாளொன்றுக்கு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் – மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை இந்த மாத இறுதியில் நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் மருத்து புள்ளிவிபரவியல் சர்வதேச நிபுணர் மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவு குறைவாக காணப்படுவதனால் இறுதியான எண்ணிக்கையை கணிக்க முடியாமல் உள்ளதாகவும் எமது செய்தி பிரிவுக்கு அவர் குறிப்பிட்டார்.

Advertisement

அத்துடன் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றை முழுமையாக கட்டுபடுத்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலங்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.