நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானது!

பொரளை டி.எஸ்.சேனநாயக்க சந்திக்கு அருகே பேருந்து மற்றும் நோயாளர் காவு வண்டி என்பன மோதி விபத்திற்குள்ளாகின.

இன்று மதியம் 1.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நோயாளர் காவு வண்டி சாரதி உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement