முல்லைத்தீவில் ஊரடங்கை மீறி விறகு வெட்டச் சென்றவர் மீது ராணுவம் தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில் விறகு வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்ற நபர், படையினர் நிற்பதைக் கண்டு வீடு நோக்கி ஓட முற்பட்டபோது, படையினரால் துரத்திப்பிடிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கணவனைக் காணவில்லை என்று மனைவியால் கிராம அமைப்பின் தலைருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் நிலையத்திலிருந்து குறித்த நபர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Advertisement