யாழில் இன்று நடந்த கொரொனா பரிசோதனைகளில், யாருக்கும் தொற்று இல்லையாம்!

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் கொரோனா பரிசோதனை மையத்தில் இன்று நடந்த கொரொனா பரிசோதனைகளில், யாருக்கும் தொற்று இல்லையென தெரிய வந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இன்று 10 பேருக்கு கொரொனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள். இதில் ஒருவர் நேற்று மாலை மன்னாரிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர். இவர் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்தவர்.

மேலும் மன்னார் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தொற்று உடையவர்களோடு தொடர்புடைய எட்டு பேருக்கான ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் யாருக்கும் தொற்று இல்லையென்பது தெரிய வந்தது.