யாழில் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் தளர்த்த திட்டம்?

யாழ்.குடாநாட்டில் புதுவருடத்துடன் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் நிபந்தனைகளுடன் தளர்த்துவது தொடர் பாக நேற்று வடமாகாண ஆளுநர் தலமையில் நடைபெற்ற வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் குறித்த கல ந்துரையாடலில் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தகூடிய இடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருக் கின்றது. அது குறித்து இராணுவத்தினர், சுகாதார பிரிவினர் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். இதன்போ து வடமராட்சி பகுதியில் ஊரடங்கை தளர்த்த இராணும் மற்றும் சுகாதார பிரிவினர் எதிர்ப்பு காட்டினர்.

இந்நிலையில் தென்மராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு, தீவகம் போன்ற பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை ஊரடங் கு சட்டத்தை தளர்த்த முடியும் என உறுதியாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் குடாநாட்டின் மற்றய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக தாவடி, அரியாலை, மானிப்பாய்

Advertisement

உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் உள்ள நிலவரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டிருக்கின்றது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், பாண்டியன்குளம், ஒட்டுசுட்டானின் ஒரு பகுதி,

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் பகுதி தொடர்பான ஆய்வின் பின்பே விபரத்தை தொிவிப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.