இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மருத்துவரால் பலாத்காரம்? உண்மை என்ன

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மருத்துவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி புகைப்படத்துடன் வைரலான நிலையில் அது தொடர்பிலான உண்மை பின்னணி தெரியவந்துள்ளது.

இளம்பெண்ணொருவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது.

மேலும் அவர் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் அவரை மருத்துவர் பலாத்காரம் செய்தார் எனவும் தகவல் பரவியது.

பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அப்பெண் உயிரிழந்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை தெரியவந்துள்ளது. அதன்படி புகைப்படத்தில் இருப்பது 16 வயது சிறுமியாகும்.

அவர் கடந்த 2017ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை உடை மாற்ற சொல்லி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

அதே சமயம் பீகாரில் 25 வயது பெண்ணொருவருக்கு கடந்த மார்ச் 25ம் திகதி கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதிக இரத்தப்போக்குடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அவரை ஊழியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.

பின்னர் வீடு திரும்பிய அப்பெண் அதிக இரத்த போக்கு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.