பண்ணை வீட்டில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் டோனி!

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இந்த ஊரடங்கு காலத்தை கழித்து வருகிறார் டோனி

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி 2019ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பின் அரையிறுதியில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் டி20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.

வரும் ஐபிஎல் தொடரில் டோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் டோனி தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு இருசக்கர வாகனத்தில் மகளுடன் ரவுண்ட்ஸ் அடித்து வருகிறார் டோனி. அதை அவரது மனைவி வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.