ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் : ஹர்திக் பாண்டியா

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் கூறுகையில், ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் ரஞ்சி போட்டியை விளையாடிய அனுபவம் இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளும் அப்படி நடந்தால் வித்தியாசமான உணர்வாக இருக்கும், மக்கள் வீட்டிலேயே இந்த போட்டியை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.