அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை – முடங்கிய ட்விட்டர்

ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித் தனது 49வது பிறந்தநாளை மே 1 கொண்டாடுகிறார். ஐம்பதாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித் குறித்து ஐம்பது சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக. இது தல பிறந்தநாள் ஸ்பெஷல்.

 1. அஜித்தின் தந்தை பாலக்காடு கேரளாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம். அம்மா கல்கத்தாவைச் சேர்ந்த மோகினி.
 2. உயர்கல்வி படிப்பை முடிக்காதவர் அஜித். அதற்காக இன்று வரை வருத்தப்பட்டதும் உண்டு.
 3. நடிப்பின் மீது இருந்த ஈர்ப்பால் சினிமாவிற்குள் நுழைந்த அஜித் ஆரம்பத்தில் என் வீடு என் கணவர் படத்தின் பாடல் காட்சியிலும் , பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.
 4. தமிழில் இயக்குநர் செல்வா இயக்கிய அமராவதி அஜித்திற்கு முதல் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அஜித்திற்கு பின்னனி குரல் கொடுத்தவர் விக்ரம்.
 5. சினிமாவிற்குள் நுழைந்த பிறகு தான் தமிழ் பேச எழுத கற்றுக் கொண்டார் அஜித்.
 6. சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே பைக் ரேஸில் அலாதி பிரியம் கொண்டவர்.
 7. அமராவதி படத்திற்கு பிறகு பைக் ரேஸ் ஒன்றில் கலந்து கொண்டவர் கீழே விழுந்து அடிபட மூன்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருட ஓய்வில் இருந்தார்.
 8. அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்த படம் அகத்தியன் இயக்கத்தில் காதல் கோட்டை.
 9. வான்மதி படத்தில் நடித்த போது அஜித், ஸ்வாதி இருவரும் காதலிப்கதாகவும் விரைவில் திருமணம் என்று தெலுங்கு சேனலுக்கு ஸ்வாதி பேட்டி கொடுத்து இருந்தார். ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
 10. காதல் கோட்டை படத்திற்கு விருது , கமர்ஷியல் வெற்றி இரண்டுடன் அதில் நடித்த ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டார் அஜித்.
 11. இயக்குநர் வசந்த் இயக்கத்தில் ஆசை படம் தான் அஜித்தை வளர்ந்து வரும் கதாநாயகனாக அடையாளம் காட்டியது.
 12. இயக்குநர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் முதலில் நடித்தவர் அஜித் தான். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார். அஜித் கதாபாத்திரத்தில் நடித்தவர் சூர்யா.
 13. விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் இணைந்து நடித்தார். அதே போல பிரசாந்துடன் கல்லூரி வாசல் , விக்ரமுடன் உல்லாசம் என ஆரம்பத்தில் டபுள் ஹீரோ படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
 14. இயக்குநர் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் படம் அஜித்தை நிஜ காதல் மன்னனாக பல பெண்கள் மனதில் அமரச் செய்தது.
 15. குடும்ப படம் காதல் படம் என்று இருந்த அஜித்தை வில்லனாக களம் இறங்க வைத்த படம் வாலி. இப்படத்திற்கு பிறகு அஜித் தனது ரூட்டை மாற்றிக் கொண்டார்.
 16. அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் நடித்த அஜித் அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 17. திருமணத்திற்கு பிறகு இன்று வரை எந்த கிசுகிசுக்களிலும் அஜித் சிக்கியதில்லை.
 18. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் நேரடி தமிழ் தயாரிப்பான உல்லாசம் படத்தில் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 20 லட்சம். அப்போது இது பெரிய தொகை.
 19. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்திற்கு பிறகு தல என்பது அஜித்தின் அடைமொழியானது.
 20. 1999 முதல் 2007 வரை அஜித்தின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.
 21. 2001ல் தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார் அஜித்.
 22. இயக்குநர் பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க கதை சொன்ன படம் நந்தா ஆனால் அஜித் அப்படத்தை நிராகரிக்க சூர்யா நடித்தார்.
 23. இயக்குநர் பாலா அஜித்தை மனதில் வைத்து எழுதிய படம் நான் கடவுள் ஆனால் அந்தப் படத்தையும் அஜித் நிராகரிக்க ஆர்யா அப்படத்தில் நடித்தார்.
 24. நான் கடவுள் படத்தை நிராகரித்ததற்காக இயக்குநர் பாலா தரப்பில் அஜித் மிரட்டப்பட்டதாக இன்று வரை மர்மக் கதைகள் உண்டு. இப்போது வரை பாலா இயக்கத்தில் அஜித் நடிக்கவே இல்லை.
 25. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அஜித்திற்கு ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீமேக் பெரிய வெற்றியைக் கொடுத்தது.
 26. கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாக விளையாடும் விளையாட்டு தான் அஜித்திற்கு அதிகம் பிடித்த ஒன்று. அந்த ஆசை மீண்டும் மங்காத்தாவில் நிறைவேறியது.
 27. மங்காத்தா படத்திற்கு பிறகு டை அடிப்பதை நிறுத்திவிட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறினார் அஜித்.
 28. பார்முலா ஒன் கார் ரேசில் கலந்து கொண்ட தமிழ் நடிகர் அஜித் மட்டும் தான்.
 29. அரசியல் வாடையே ஆகாத அஜித்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேவரைட் அரசியல்வாதி.
 30. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் பிடித்த நடிகர்களில் அஜித்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தொடர்பான விழாக்களில் அஜித் கலந்து கொண்டிருக்கிறார்
 31. அரசியல் வாரிசாக அஜித்தை உருவாக்க எத்தனையோ அழைப்புகள் வந்தும் அரசியலை நிராகரித்து விட்டார் அஜித்.
 32. மேடைகளிலும் மீடியாக்களிடமும் பேசுவதை ஏகன் படத்திற்கு பிறகு நிறுத்திக் கொண்டார் அஜித்.
 33. அசல் படத்திற்காக பத்திரிக்கையாளர்களுக்கு பார்ட்டி கொடுத்தது தான் அஜித் கடைசியாக மீடியாக்களிடம் பேசியது. அதன்பிறகு இப்போது வரை மீடியாக்களை அஜித் சந்திக்கவில்லை.
 34. ஒவ்வொரு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கும் வாக்களிக்க அஜித் தவறியதில்லை. ஸ்பெஷல் வரிசைகளை தவிர்த்து லைனில் நிற்பது அஜித்தின் வாடிக்கை.
 35. பைக் ரேஸ் , கார் ரேஸ் உடன் அஜித்தின் கூடுதல் பொழுதுபோக்கு விமானம் ஓட்டுதல் , துப்பாக்கி சுடுதல். விமானம் இயக்க முறைப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்.
 36. பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வாக புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கில் பயணம் செய்தார் அஜித்.
 37. சொந்தமாக பிஎம்டபிள்யூ பைக் வைத்திருக்கிறார் அஜித். இதன் விலை 20 லட்சத்திற்கும் மேல். ஆனால் கார்களில் ஸ்விப்ட் காரைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார். ஸ்விப்ட் தான் அஜித்தின் பேவரைட் கார்.
  : 38. ஐபோன் , ஆண்ட்ராய்டுகள் பயன்படுத்துவது அஜித்திற்கு பிடிக்காத ஒன்று. சாதாரண போனை பயன்படுத்தும் அஜித்தை இமெயில் மூலமாக தொடர்பு கொண்டால் பதில் கிடைக்கும்.
 38. ஆரம்பத்தில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இரண்டும் அஜித்திற்கு இருந்தது. ஆனால் இப்போது படங்களில் கூட அது தொடர்பான காட்சிகள் வேண்டாம் என இயக்குநர்களிடம் சொல்கிறார்.
 39. நள்ளிரவு நேரங்களில் திருவான்மியூர் கடற்கரையில் அஜித் பலமுறை காற்று வாங்கச் சென்றதுண்டு.
 40. நடிப்பைத் தாண்டி அவரது ஆர்வம் சமையல். அஜித் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் என்பது அவரது படக்குழுவினர்களுக்குத் தெரியும்.
 41. நடிகராக இருந்தாலும் மகன், மகள் பள்ளி தொடர்பான விழாக்களில் , போட்டிகளில் கலந்து கொள்வதில் அஜித் தவறியதில்லை.
 42. அஜித் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எட்டு மணி நேரம் தான் வேலை. அவர்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்ததுடன் அவர்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அஜித் ஏற்றிருக்கிறார்.
 43. அஜித் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. மருத்துவம் தொடர்பான உதவிகள் அஜித் தரப்பில் இப்போதும் சத்தமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. நூற்றுக கணக்கான கண் அறுவை சிகிச்சைக்கு நிதியளித்திருக்கிறார் அஜித்.
 44. சென்னை பனையூரில் உள்ள அஜித்தின் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் , படம் பார்க்கும் தியேட்டர் என அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளது.
 45. கூட்டங்களில் சிக்காமல் இருக்கும் அஜித் சமீப காலங்களில் ஏர்போர்ட் உள்ளிட்ட பொது இடங்களில் ரசிகர்கள் கேட்டால் புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கிறார்.
 46. படப்பிடிப்பில் பிரியாணி செய்வதுடன் கேமராவில் புகைப்படம் எடுப்பது அஜித்தின் பொழுதுபோக்கு. உடன் நடிக்கும் நடிகர்களை அவர்களுக்கே தெரியாமல் அழகாக புகைப்படம் எடுத்துக் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.
 47. சென்னை பெரு வெள்ளத்தின் போது அவருடைய திருவான்மியூர் வீட்டில் அந்த பகுதியைச் சுற்றி இருந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு வாரம் அவர் வீட்டில் வைத்து உணவளித்தார். ஆனால் இது தொடர்பாக ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை.
 48. தனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் எந்த அளவிற்கும் இறங்கி வருவது அஜித் ஸ்டைல். சமீபத்தில் அவரது மக்கள் தொடர்பாளரின் குடும்ப நிகழ்ச்சியில் வரவேற்பில் இருந்து பலரை கவனித்து, நீண்ட நேரம் இருந்தார் அஜித்.
 49. இத்தனையும் பிடித்த அஜித்திற்கு பிடிக்காதது, அரசியல் சாயம் பூசுவது, அரசியலுக்கு வருவது. ரசிகர்களை சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்வது.
Advertisement