தமிழக வீரர் மீது ஹர்பஜன் சிங்கிற்கு பொறாமையா? அவரது பதில்

தமிழக வீரர் அஸ்வின் மீது பொறாமை இருக்கிறதாக என்ற கேள்விக்கு மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பதில் அளித்துள்ளார்.

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹர்பஜன்சிங்கும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினர். அதில் ஹர்பஜன்சிங் கூறும் போது, ‘எங்களிடையே நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் சொல்வார்கள். ஆனால் அஸ்வின் மீது ஒரு போதும் பொறாமை கொண்டதில்லை.

இப்போது உலகின் சிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின் தான். இதேபோல் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் சிறந்த ஆப்-ஸ்பின்னராக திகழ்கிறார். அஸ்வின் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. உலக அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் கூட இடம் பிடிக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

Advertisement

இந்திய அணியில் அஸ்வினின் சுழல் ஜாலம் மேலோங்கியதும், ஹர்பஜன்சிங் ஒரேயடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.