மே18 திகதி 18:18 மணிக்கு உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவவந்தல் நிகழ்வு! கனேடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோக பூர்வ அறிவிப்பு

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையின் 11 ம் ஆண்டு நினைவு நாள்

ஈழப் போரில் இறுதியாக இனப் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்களையும் , போரில் வீராகவியமான அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கு அஞ்சலி செய்யும் முகமாக உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களும், அனைத்து அமைப்புக்களும் ஒன்றுபட்டு மே18ம் திகதி மாலை சரியாக 18:18 மணிக்கு[6:18] அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செய்வதற்கு ஒன்று கூடி தீர்மானம்

அது சார்ந்து இன்று தொலைபேசியினுடாக கூட்டப்பட்ட ஊடக சந்திப்பின் போது இவ் விடயத்தை உத்தியோக பூர்வமாக கனேடியத் தமிழர் தேசிய அவை அறிவித்துள்ளனர்.

Advertisement