வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் கத்தியுடன் நின்றவர் கைது!

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் சிறியளவிலான கத்தி ஒன்றினை வைத்திருந்த குற்றசாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் இன்றுமாலை இருதரப்பிற்கிடையில் இடம்பெற்ற முரன்பாட்டினால், பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்தில் அவர்களது உறவினர்கள் சிலர் ஒன்றுகூடியிருந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலை வளாகத்திற்குள் கத்தியுடன் ஒருவர் நிற்பதாக வைத்தியசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டநிலையில், பொலிசாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன்,
அவர் வைத்திருந்த சிறியளவிலான கத்தியினையும் பொலிசார் மீட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.