யாழ் நகரில் மதுபோதையில் நகரத்தை ரணகளமாக்கியவர் கைது!

யாழ் நகரில் மதுபோதையில் காரை செலுத்தி வந்த நபரொவர், வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

யாழ். ஸ்ரான்லி வீதி பகுதியில் இன்று (15) மதியம் இந்த சம்பவம் நடந்தது.

நிறைபோதையிலிருந்த கார் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரான்லி வீதியால் காரை செலுத்தி வந்த நபர், வெலிங்டன் சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மதுபோதையில் காரை செலுத்தியவரை கைது செய்தனர். காரையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் நேற்று மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.