எல்லை தாண்டி காதலிக்கும் ஜோடிகளுக்கு சுவிட்சர்லாந்து அளித்துள்ள வரப்பிரசாதம்!

தங்கள் காதலர் அல்லது காதலி எல்லைக்கப்பாலிருக்கும் பட்சத்தில், அவர்களை சந்திப்பதற்காக காதலர்களுக்கென்று எல்லைக் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ளது சுவிஸ் அரசு.

ஜேர்மனி அல்லது ஆஸ்திரியாவில் தங்கள் காதலன் அல்லது காதலி வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அளித்துள்ளது சுவிஸ் அரசு.

அவர்களுக்கு இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன.

Advertisement

நேற்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நன்கு குறைந்துள்ளதையடுத்து ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் எல்லை தாண்டி வாழும் (திருமணமாகாத) காதலர்களுக்காக கட்டுப்பாடுகளை நெகிழ்த்த முடிவு செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு திருமணமான தம்பதியர், குழந்தைகள் உடையவர்கள் மட்டுமே எல்லை தாண்டி சென்று தங்கள் துணையை குடும்பத்தை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.