பயிற்சி துவங்கினாலும் இந்திய அணியில் இருந்து கோஹ்லி-ரோகித் தனிமைப்படுத்தப்படுவர்

இந்திய அணியின் துணை தலைவர் ரோகித் மற்றும் அணியின் தலைவர் கோஹ்லி இருவருமே தனிமைப்படுத்தப்படுவர் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. குறிப்பாக மும்பை, மஹாராஷ்ட்டிரா போன்ற நகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

குறிப்பாக மும்பை நகரில் ஏராளமானோர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, மற்ற வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்கப்பட்டாலும், கோஹ்லி மற்றும் ரோகித் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்கிற அறிவிப்பு வந்தபிறகே மீண்டும் பயிற்சிக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.