கிரிக்கட் பந்துக்கு எனிமேல் “எச்சில்” போட தடை

கிரிக்கட் பந்தை மினுமினுப்பாக்க இனிமேல் எச்சிலைப் பயன்படுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுநிலை நடுவர்களை உள்நாட்டு நடுவர்கள் பிரதியிடுவர். எல்லா வகையான போட்டியின் இனிங்ஸொன்றுக்கும் ஒவ்வொரு அணிக்கும் மேலதிக மீளாய்வு நடத்தப்படும் என்றார்.

அத்துடன் எச்சிலுக்குப் பதிலாக வியர்வையைப் பயன்படுத்தலாம் என அறிவுரை வழக்கப்பட்டது

Advertisement

கொவிட்-19 மாற்றுவீரர்கள் இல்லை போன்ற பரிந்துரைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக மீண்டும் கிரிக்கெட்டை ஆரம்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கைகளே மேற்கூறப்பட்ட பரிந்துரைகளாவன என கிரிக்கட் செயற்குழுவின் தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பரிந்துரைகள் தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், இம்மாதம் 28ஆம் திகதி காணொளி மாநாடு மூலம் சந்திக்கவுள்ள பணிப்பாளர் சபையால் இது ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் செயற்குழுவின் கூட்டமும் மெய்நிகர் உலகத்தில் நடைபெற்ற நிலையில், முன்னாள் சர்வதேச வீரர்களான ராகுல் ட்ராவிட், மகேல ஜெயவர்தன, அன்றூ ஸ்றோஸ், பெலின்டா கிளார்க்குடன், இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், உயர்நிலை நடுவர் றிச்சர்ட் இல்லிங்வேர்த்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருந்தது