சாலையில் தூக்கி வீசப்பட்ட சுவிஸ் தாயாரும் இரு சிறார்களும்!

சுவிட்சர்லாந்தில் சாலையை கடக்க முயன்ற தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளும் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூரிச் மண்டலத்தில் Effretikon பகுதியிலேயே குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. வியாழனன்று மாலை சுமார் 7 மணியளவில் நடந்தேறிய இந்த விபத்து குறித்து மேலதிக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் மண்டல பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

சம்பவத்தின்போது 30 வயது தாயார் ஒருவரும் அவரது ஒரு வயது மகன் மற்றும் 3 வயது மகளுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

பாதசாரிகளுக்கான பாதையிலேயே அவர் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென்று வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் குறித்த தாயார் மிதமான காயங்களுடன் சம்பவயிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது பிள்ளைகள் இருவருக்கும் லேசான காயங்களே என கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியான 62 வயது நபருக்கு காயமேதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

முதலுதவிக்கு பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு ஹெலிகொப்டரில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சாலை விபத்து காரணமாக தொடர்புடைய சாலையானது சுமார் 3 மணி நேரம் மூடப்பட்டிருந்தது.