போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் இலங்கை வீரர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்காவை இலங்கை போலீசார் தடுத்து வைத்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஹெராயின் வைத்திருந்ததற்காக 25 வயதான கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கா மற்றும் அவரது நண்பரும் மே 23 அன்று கைது செய்யப்பட்டனர்.

வடமேற்கு மாகாணத்தில் குலியபிட்டியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷெஹான் மதுஷங்காவை ஜூன் 2 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் இலங்கை ஒப்பந்த வீரர் மதுஷங்கா ஆவார்.

2018 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் போட்டியிலேயோ வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாராட்டுகளை பெற்றார் மதுஷங்கா.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது வீரராக ஆனார்.

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பின்னர் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்காவின் ஒப்பந்தத்தை இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.

எஸ்.எல்.சி தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில்,

இது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் ஒரு ஒப்பந்த வீரர். அவர் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தினால் அவரது ஒப்பந்தத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.