ஷெஹான் மதுசங்க போதைப்பொருளுடன் கைது!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரரான ஷெஹான் மதுசங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி பன்னல வீதிச்சோதனை சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையில், அவரது காருக்குள் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவரிடமிருந்து 2 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருடன் இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று குளியாப்பிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவவைச் சேர்ந்த தேவப்பிரியகே ஷெஹான் மதுசங்க குமார (25) 2018 இல் இலங்கை அணியில் அறிமுகமாகியிருந்தார். 1 ஒரு நாள் போட்டியில் பங்குபற்றி 3 விக்கெட்டை வீழ்த்தினார். பங்களாதேஷிற்கு எதிராக அறிமுகமான போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை புரிந்திருந்தார். 2 ரி 20 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டையும், 14 முதல்தர போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டையும் வீழ்த்தினார்.