கொரானா பலி எண்ணிக்கையில் சீனாவைக் கடந்த இந்தியா!

இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையானது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையை கடந்துள்ளது.

சீனாவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 4,638 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, இந்தியாவில் இதுவரையில் 4,706 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்ஸா அல்-குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கடவுளிடமிருந்து கிடைத்த தண்டனை என்று தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பில் மூன்றாவது தலைவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள 3வது காணொளி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 காரணமாக 59 இலட்சத்து 9,685 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதோடு, 3 இலட்சத்து 62,102 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.