பிரித்தானியா ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய மருத்துவர்!

பிரித்தானியாவில் பணிபுரியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் அங்குள்ள ஹொட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ராஜேஷ் குப்தா என்ற மருத்துவர் கடந்த 2006ல் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.

Berkshire கவுண்டியில் உள்ள NHSஆல் நடத்தப்படும் Wexham Park மருத்துவமனையில் ராஜேஷ் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

ராஜேஷுக்கு மனைவியும், மகனும் உள்ள நிலையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்தாரை பிரிந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டு அங்குள்ள ஹொட்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இரு சில தினங்களுக்கு முன்னர் ஹொட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

இது தொடர்பில் Frimley Health NHS Foundation Trust வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

தற்போதைய நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட மருத்துவராக அவர் இருந்தார்.

சக ஊழியர்கள் அவரை சிறந்த மருத்துவராக பார்த்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.