டோனி 2011-ல் உலகக்கோப்பை ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சங்ககாரா, 2011-ஆம் ஆண்டில் இந்திய அணி ஜெயிப்பதற்கு நாணய சுழற்சியும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.

ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக்கோப்பை எதிர்பார்ப்பை கடந்த 2011-ஆம் ஆண்டு நிறைவேற்றியவர் தான் டோனி.

அந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டோனி வெற்றிக்கான எண்ணை சிக்ஸர் மூலம் அடித்து கோப்பையை பெற்றுத் தந்தார்.

இப்போட்டியில் இலங்கை அணி தோற்றாலும், அந்தணியில் இருந்த சங்ககாரா, இந்தியாவை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில், தற்போது வீட்டில் அடைந்திருக்கும் வீரர்கள், முன்னாள் நட்சத்திரங்கள் சக வீரர்களுடன் வீடியோ காலில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நேரலையில் உரையாடிய குமார் சங்ககாரா உலக கோப்பை நினைவுகளை பகிர்ந்து கொண்டார் .

அப்போது பேசிய அவர், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். கரகோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். மிகவும் கூச்சலாக இருந்தது.

விக்கெட் கீப்பராக இருக்கும் என்னால் ஸ்லிப்பில் அருகில் நிற்கும் பீல்டருடன் கூட பேச முடியாது. அந்த அளவிற்கு கூட்டம் இருக்கும்.

அவ்வளவு சத்தம் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தில் இருந்தது. அந்த இறுதிப்போட்டியில் நான் தான் டாஸ் சுண்டினேன். அப்போது நான் என்ன கேட்டேன் என்பது டோனியின் காதில் விழவில்லை. நீங்கள் டெய்ல் என்று சொன்னீர்களா என்று டோனி கேட்டார். அதற்கு நான் ஹெட் என்றேன்.

அப்போது போட்டி நடுவர் நான் தான் டாஸ் ஜெயித்ததாக கூறினார். அதற்கு டோனி மறுப்பு தெரிவித்தார். இத்னாஅல் குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக மீண்டும் ஒருமுறை டாஸ் போடலாம் என்றார் டோனி. இந்தமுறையும் அதிர்ஷ்ட வசமாக டாஸை நானே வென்றேன். ஒருவேளை இந்திய வென்றிருந்தால் அந்த அணி பேட்டிங் பிடித்திருக்கும், முடிவி மாறியிருக்கலாமோ என்று கூறியுள்ளார்.