லண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்!

பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய பணமோசடியில் ஈடுபட்டதற்காக இரு இந்திய தமிழர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்லில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

லண்டனின் Purley-வை சேர்ந்த Vijaya Kumar Krishnasamy (32) மற்றும் Chandrasekar Nallayan இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சேர்ந்து 2.4 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதோடு, £1.6 மில்லியன் பணமோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரான Krishnasamy-க்கு ஐந்து ஆண்டுகள், 9 மாதங்கள் சிறை தண்டனையும், Nallayan-க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல வணிகக் கணக்குகளின் ஐபி முகவரிகள் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக பார்க்லேஸ் வங்கியிடமிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டில் பொலிசாருக்கு புகார் அறிக்கை வந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் Krishnasamy இந்த குற்றத்தை செய்தமையை கண்டறிந்த பொலிசார் கடந்த 2019 மே 2ஆம் திகதி அவரை கைது செய்தனர்.

அவரின் செல்போன் எண்ணை வைத்து இன்னொரு குற்றவாளியான Nallayanனும் அதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, இந்த பண மோசடியால் உலகம் முழுவதும் 24 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதாவது, தங்களது வாடிக்கையாளரிடமிருந்து வந்ததாகக் கூறி ஒரு மோசடி மின்னஞ்சலைப் நிறுவனத்தினர் பெறுவார்கள், பின்னர் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாற்றுவது குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்கள்.

இதையடுத்து குறிப்பிட்ட நிறுவனம் தங்கள் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதாக நம்பி, சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளனர்,

இதேவேளை குறித்த நிறுவனங்களின் உண்மையான வாடிக்கையாளர்கள் கட்டணத்தைத் பெற தொடங்கும் வரை அவர்கள் மோசடி செய்யப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.