நடிகை பிந்து மாதவிக்கு கொரேனாவா?

கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுதும் லாக்டவுன். அப்படியிருந்தும், கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது என்றால் லாக்டவுன் இல்லையென்றால் இந்தியாவின் நிலை என்ன என்று யோசித்து பார்த்தாலே குபுக் என வியர்த்து விடுகின்றது.

மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சிக்கு கிடைத்த பலன் தான் இது. மக்கள் தொகை 30 கோடி மற்றும் அதற்கும் குறைவாக உள்ள மேலை நாடுகளில் பாதிப்பு 5 லட்சம் , 10 லட்சம் என எகிறிக்கொண்டிருக்க, 135 கோடி மக்கள் தொகை கொண்டா இந்தியாவில் பாதிப்பு கட்டுக்குள் இருக்க மத்திய, மாநில அரசுகளின் முயற்சியே காரணம்.

இதனால், பாரத பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பிரபல நடிகை பிந்து மாதவி கொரோனா பாதிப்பு உள்ள அபார்ட்மெண்டில் இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு வாசலை மாநகராட்சி நிர்வாகிகள் சீல் வைத்துவிட்டனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பிந்து மாதவி “என்னுடைய குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பவாசிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு சுய தனிமையில் இருக்கப்போகிறோம் (One