பாதுகாப்பற்ற மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது திக்கோடையைச் சேர்ந்த 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த மின்சார வேலிப் பகுதியில் குறித்த விவசாயின் மாட்டுபட்டி அமைந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்து மாட்டுபட்டிக்கு சென்றிருந்த குறித்த நபர் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பியை பிடித்து மாட்டுபட்டிக்கு செல்ல முற்பட்டபோது மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்