யாழில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய முச்சக்கரவண்டி சாரதி!

யாழ் மாநகரசபை முன்னால் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய முச்சக்கரவண்டி சாரதியை அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்துள்ளனர்.

யாழ்.நல்லூர் மாநகரசபை முன்னால் இன்று காலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு வீதியில் விழுந்தார்.

இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தப்பித்து செல்ல முயன்ற போது அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்துள்ளனர்.

விபத்துள்ளாகிய இளைஞன் கால் நடக்க முடியாமல் ஒடிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முச்சக்கரவண்டி வண்டியைப்பிடித்து அந்த முச்சக்கர வண்டியிலே சென்று விட்டார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் யாழ்.மாநகரசபை முன்னால் அமைத்துள்ள பருத்தித்துறை வீதி நடுவே விட்டுச் சென்றபடி உள்ளது.