வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பலி!

வவுனியா – கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அரசடி வீதி நல்லூரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதியைச் சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.