திருகோணமலையில் லொறி கவிழ்ந்து சாரதி பலி!

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் இன்று (03) காலை லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக லொறி பயணித்துக்கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.