லண்டனில் ரோந்து சென்ற பொலிசாரை தாக்கிய கறுப்பின இளைஞர்கள்!

லண்டனில் கறுப்பின மக்கள் அதிகம் வாழும் ஹக்கினியில், ரோந்துக்காக வீதியில் நடந்து சென்ற பொலிசார் மீது 2 இளைஞர்கள் தேவை இல்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

ஒரு ஆண் பொலிஸ் அதிகாரியும் ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் நடந்து சென்ற வேளை திடீரென அங்கே வந்த 2 கறுப்பின இளைஞர்கள், அவ்விருவரையும் நிலத்தில் வீழ்த்தி, கைகளால் சுருக்கு போட்டுள்ளார்கள்.

உடனே வீதியில் சென்ற வேறு கறுப்பின இளைஞர்கள் இந்த சம்பவத்தை அப்படியே செல்பி எடுத்ததோடு பேஸ் புக் லைவில் போட்டுக் காட்டியும் உள்ளார்கள்.

உடனடியாக மேலதிக பொலிசார் அங்கே வரவழைக்கப்பட்டு.குறித்த 2 இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தை உள்துறை அமைச்சர் கடுமையாக கண்டித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், இது ஒரு தேவையில்லாத விதண்டாவத தாக்குதல் மன்னிக்க முடியாத ஒரு சம்பவம் என கூறியுள்ளார்.