இணைய சவாலுக்காக காது அறுக்கப்பட்டு இறந்து கிடக்கும் குதிரைகள்? உண்மை பின்னணி என்ன?

மர்மமான முறையில் குதிரைகள் காது அறுபட்டு உயிர் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது

பிரான்சில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஐந்து குதிரைகள், ஒரு குட்டி குதிரை, ஒரு கழுதை ஆகிய விலங்குகள் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நார்மாண்டி என்ற பகுதியில் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குதிரைகள் இறந்து கிடந்துள்ளது.

ஜூன் மாதத்திலும் இதேபோன்று இரண்டு குதிரைகள் இறந்து கிடந்தது தொடர்ந்து, இவ்வாறு விலங்குகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து காவல்துறையினர் பல பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாதம் 6ஆம் தேதி தீபி என்ற பகுதியிலும் பெண் குதிரை ஒன்று காது அறுபட்ட நிலையில் உயிர் இழந்து கிடந்தது.

பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு குரும்சினில் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, காது அறுக்கப்பட்ட நிலையில் கழுதை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக்கண்ட உரிமையாளர் மனது உடைந்து போய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோன்று ஷைனி மாரிடைம் பகுதியிலும் இரண்டு குதிரைகள் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது போன்று பல சம்பவங்கள் பிப்ரவரி மாதத்திலிருந்து நடந்துள்ளது. உயிர் இழந்த அனைத்து விலங்குகளின் காதும் அறுக்கப்பட்டு இருந்தது. இச்சம்பவம் சாத்தானை வணங்குபவர்களின் மதச் சடங்காக இருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால் இணைய வாசிகள் சவாலுக்காக செய்கின்றனர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது