கொரோனாவால் கைவிடப்பட்டது ஆசிய கிண்ண 2020 போட்டிகள்

ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் முற்றிலும் நீங்காத சூழலில் போட்டித் தொடர் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே இரத்து செய்யப்படுவதற்கு காரணமாகும். ஏற்கனவே ரீ-20 கிரிக்கெட் உலகக்கிண்ணம்-2020 போட்டித் தொடரும் ஒத்திவைக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.