வடக்கில் நாளையதினம் மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள்!

உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்புமற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பல பகுதிகளில் மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (10) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ் மாவட்டத்தில்- பலாலி சந்தி பிரதேசம், வசாவிளான் ஒரு பகுதி, பலாலி விமான நிலைய பிரதேசம் என்பவற்றில் மின்சாரம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல வவுனியா மாவட்டத்தில்- கிறிஸ்தவ குளம், புளியங்குளம், வாரிக்குட்டியூர், சங்கரபுரம் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படும்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் சிறுநாவற்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, தலைமன்னார் கடற்படை முகாம், தலைமன்னார் பல்மரா ஹவுஸ், கூல்மென்ஐஸ் தொழிற்சாலை, அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, வங்காலை ஐஸ் தொழிற்சாலை, பல்மரா ஹவுஸ் கரைசல், எருக்கலம்பிட்டி நீர்ப்பாசன சபை, நியூ சில்க் ரோட், தோட்டவெளி, ரைமிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை, இன்டர்சியல் எஸ்ரேட், மன்னார் வைத்தியசாலை, ஆவெரியா ஐஸ் தொழிற்சாலை, கீரி ஐஸ் தொழிற்சாலை, இலங்கை போக்குவரத்துசபை, மன்னார் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், அரச அதிபர் அலுவலகம், பூட் சிற்றி, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக் தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.