கனடாவில் மாயமான மகளும் தந்தையும்!

கனடாவில் ஒரு குடும்பமே மாயமாகியுள்ள நிலையில், அவர்களைக் குறித்து தகவல் அறிவதற்காக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கைச் சேர்ந்த Martin Carpentier (44), அவரது மகள்கள் Norah Carpentier (11), Romy Carpentier (6), ஆகியோர் திடீரென மாயமாகியுள்ளனர். பொலிசார், Martin தன் மகள்களைக் கடத்திக்கொண்டு போயிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

யாராவது அவர்களைக் கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிப்பதற்காகத்தான் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Lotbinière பகுதியில் ஒரு கார், விபத்துக்குள்ளாகி பல முறை சாலையில் உருண்டு சாலையின் மறு புறம் சென்று விழுந்தது தெரியவந்துள்ளது. அது, Martin தன் மகள்களுடன் சென்ற கார் என கருதப்படுகிறது.

ஆனால், பொலிசார் சென்று பார்க்கும்போது, அதற்குள் யாருமில்லை. ஆக, அதிலிருந்தவர்கள் நடந்தே அங்கிருந்து சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

பொலிசார், ஹெலிகொப்டர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குப் பின்னால் உள்ள ஷெட் முதலான இடங்களில் யாராவது இருக்கிறார்களா என கவனித்துக்கொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.