மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – மொத்த எண்ணிக்கை 2,511

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 43 பேரில் 13 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் எனவும் ஏனைய 30 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.