மனைவியின் கை, கால்களை கட்டி போட்ட கணவன்!

தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). கார் ஓட்டுநராக உள்ளார்.

இவர் மனைவி சரஸ்வதி (37) பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு போதுமான வருமானம் இல்லாமல் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த தேவிபிரசாத் தனது மனைவி சரஸ்வதியை வெள்ளிக்கிழமை இரவு கை கால்களை கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இருவரது உடல்களையும் பொலிசார் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.