நாளாவது முறையாக காதலில் விழுந்த அமலாபால் – காதலன் யார் தெரியுமா?

அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி எனும் காவிய படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் கதாபாத்திரம் தான் அப்படி என்றால் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் போல.

இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார். அந்த காதல் முறிவால் விஜய் மிகவும் கவலையில் இருந்தார். ஆனால் அமலாபால் அப்படி ஒன்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உடனடியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தனுசுக்கும் அமலாபாலுக்கும் கிசுகிசு ஏற்பட்டதாக அவரது மாமனாரே கூறியது சர்ச்சையை கிளப்பியது. அந்த கட்டத்தில் தனுஷ் தயாரிப்பில் ஒரு சில படங்களில் நடித்தார்.

Advertisement

அதன் பிறகு வட மாநில பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்தார். அவருடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை எனக் கூறி மறுத்துவிட்டார்.

தற்போது அந்த பாடகரையும் விட்டுவிட்டு ஒரு நடிகரின் மீது காதல் கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தது. இது கன்னித் தீவு போல் முடியாது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலிக்கிறேன் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அது ஒரு வாட்சை விளம்பரப்படுத்துவதற்காக இருந்தாலும் ரசிகர்கள் கண்டபடி கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.