யாழ்ப்பாணத்தாருக்கு தெரியாதது பிள்ளையானுக்கு தெரியுமாம்!

யாழ் மேட்டுக்குடி அரசினை தலைமையாக கொண்டு இயங்குகின்ற தமிழரசுக் கட்சிக்கு கூட தெரியாத, புரியாத விடயங்களை தலைவர் பிள்ளையான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தியுள்ளார் என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஆதரித்து வாழைச்சேனை மயிலங்கரச்சையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலமைச்சராக பிள்ளiயான் இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் கடந்த காலத்தில் அரசாங்கம் ஆதரவு வழங்காமையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் நாங்கள் முன்வந்துள்ளோம்.

யாழ் மேட்டுக்குடி அரசினை தலைமையாக கொண்டு இயங்குகின்ற தமிழரசுக் கட்சிக்கு கூட தெரியாத, புரியாத விடயங்களை தலைவர் பிள்ளையான் தேர்ததல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது மாற்றத்திற்காக எங்களுடன் கைகோப்பிர்களானால் நிந்நியமாக அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை அடைய முடியும்.

பிள்ளையான் மகிந்த அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலுடன் இருந்த போது எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே கிழக்கு மக்களாகிய எமக்கு இணக்காட்டு அரசியல் மற்றும் அபிவிருத்தி அரசியல் மிக தேவையான விடயமாகும். அதனை விட்டு எதிர்ப்பு அரசியலை காட்டி சாதிக்க போவது எதுவுமில்லை.

கிழக்கு மண்ணில் என்ன அபிவிருத்திகளை அடைய நினைக்கின்றோமோ அத்தனையையும் அடைந்து கொள்ள முடியும் என்பதே உண்மை. எனவே எமது தலைவரின் வெற்றிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மயிலங்கரச்சை மங்களராமைய விகாராதிபதி மகிந்தா லங்கார தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், கொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.