கடல்வழியாக யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி?

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வடக்கிற்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து நேற்று சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு மாலை வெளியாகும்.

Advertisement