விடுதலை புலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள் இருந்ததாக சர்வதேசத்திடம் கூறும்படி சுமந்திரன் என்னிடம் கூறினார் – அனந்தி சசிதரன்

விடுதலை புலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள் இருந்ததாக சர்வதேசத்திடம் கூறும்படி சுமந்திரன் தன்னிடம் கூறியதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

2013இல் நான் மாகாண சபையில் வெற்றியீட்டியபோது, சர்வதேச நீதிக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக என்னையும் சுமந்திரனையும் செல்லுமாறு கூறப்பட்டது.

இதன்படி அங்கு சென்ற நாம், சில நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, சுமந்திரன் என்னைப் பேச விடாமல் தடுத்தார்.

அவர், நீங்கள் ஒரு புலியினுடைய மனைவி. நீங்கள் பேசும் கருத்து புலியினுடைய கருத்தாகப் பார்க்கப்படும் என்று கூறி தானே பேசியதாகவும் அனந்தி குறிப்பிட்டார்.

அதற்குப் பின்னர் தனி அறைகளில் சில நாட்டுக் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியபோது, நான் இராணுவ முகாம் தமிழ் மக்களுடைய மனிதப் புதைகுழி என்று கூறியபோது, சுமந்திரன் என்னிடம் “அப்படிக் கூறவேண்டாம். புலிகளின் முகாம்களிலும் புதைகுழிகள் இருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும்” எனக் கூறியதாகவும் அனந்தி தெரிவித்தார்.

அப்போது, அவருக்கு நான் சொன்னேன். நான் நீதிபதியாக இங்கு வரவில்லை. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் மக்கள் பிரநிதியாக வந்திருக்கிறேன் என கூறியதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.