ஞானசார தேரரின் முகப்புத்தகம் முடக்கம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் முகப்புத்தகம் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அதுரலிய ரத்தன தேரர் ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கலகொட அத்தே ஞானசார தேரர், இனவாதியென கூறியே அவரின் முகப்புத்தகம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது அவர், முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டார். தற்போது ஞானசார தேரரின் கருத்து உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் இனவாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது முகப்புத்தகம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது” என அவர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.